shadow

திமுகவில் இணைந்தது எப்போது? பழ.கருப்பையா விளக்கம்.

pazaikaruppaiyvc1கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன், துக்ளக் ஆண்டு விழாவில் அதிமுக அமைச்சர்களுக்கு எதிராக பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பழ. கருப்பையா, அதன் பின்னர் அதிமுக தலைமை நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாகவே தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார்.

பின்னர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அவர் திமுக அல்லது காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது தேர்தல் முடிந்து அரசியல் பரபரப்பு குறைந்திருக்கும் நிலையில் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி முன்பு திமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.

திமுகவில் அதிகாரபூர்வமாக இன்றைக்குத்தான் இணைந்தாலும், மனதளவில் உடலளவிலும் திமுகவில் இணைந்து பல மாதங்கள் ஆகிவிட்டதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் கருணாநிதி, மு.க. ஸ்டாலின் ஆகியோர்களுடன் இணைந்து திராவிட இயக்க வளர்ச்சிக்கு தாம் பாடுபடப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதே பழ.கருப்பையா திமுக தலைவர் கருணாநிதியை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கடுமையாக தாக்கி பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Pazha Karuppaiah joined in DMK today

அதிமுகவில் இருந்து ஜெயலலிதா என்னை நீக்கியது நியாயம்தான். பழ.கருப்பையா

Leave a Reply