shadow

விரைவில் ‘ட்விட்டரில் பேமன்ட்ஸ்’ வசதி: எலான் மஸ்க் அதிரடி

டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் தற்போது நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்க பேமென்ட் வசதி வர இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பேடிஎம், பேஸ்புக் கூகுள் உள்ளிட்ட பல சமூக வலைதளங்களில் தற்போது பேமென்ட் வசதி இருந்து வரும் நிலையில் விரைவில் பயனாளிகள் டுவிட்டர் மூலமாகவும் பண பரிவர்த்தனை செய்யலாம்.

இதுகுறித்து விளம்பரங்களுடன் எலான் மஸ்க் ஆலோசனை செய்து வருகிறார். விரைவில் டுவிட்டரில் பேமெண்ட் அம்சம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டுவிட்டர், பேமெண்ட், எலான் மஸ்க்,