தேவையான பொருட்கள்:
பாஸ்தா – 2 கப்
சிக்கன் – 1கப்
சீஸ் – 100 கிராம்
தக்காளி – 1
வெங்காயம் – 1
குடை மிளகாய் – சிறியது 1
மஞ்சள் – 2 மேஜைக்கரண்டி
சீரகம் பவுடர் – 2 மேஜைக்கரண்டி
மிளகு பவுடர் – 2 மேஜைக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு, மல்லி இலை – தேவையான அளவு

செய்முறை:
முதலில் பாஸ்தாவை கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு வடிகட்டி வைக்க வேண்டும். சிக்கனை சிறிய துண்டுகளாக கட் செய்து கழுவி நீர் இல்லாமல் வைக்க வேண்டும். தக்காளி, வெங்காயம், குடை மிளகாய், மல்லி இலை பொடியாக அரிந்து கொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி, சிக்கன், மஞ்சள், சீரகம், மிளகு, உப்பு சிறிது போட்டு வெந்தவுடன், குடை மிளகாய் போட்டு கிளறி இறக்க வேண்டும்.

பேக்கிங் பவுலில் எண்ணெய் சிறிது தடவி பாஸ்தா, வேக வைத்த சிக்கன், அதன் மேல் செடார் சீஸ் போட்டு அவனில் 200 டிகிரியில் 15 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். மல்லி இலை தூவினால் பாஸ்தா சிக்கன் ரெடி.

Leave a Reply