நீங்கள் பொது இடத்தில் கம்ப்யூட்டரை பயன்படுத்தும்போதோ, அல்லது சைபர் கபேயில் பயன்படுத்தும் போதோ படத்தில் காண்பித்து இருப்பது போன்று கருப்பு நிற பின்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்று பார்க்கவும். அவ்வாறு பொருத்தப்பட்டிருந்தால் அந்த கம்ப்யூட்டரை பயன்படுத்த வேண்டாம். அதில் உங்கள் தகவல்கள் அனைத்தும் திருடப்பட வாய்ப்பு இருக்கிறது.
உண்மையில் இந்த கருப்பு நிற பின், நீங்கள் அந்த கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் அனைத்து பாஸ்வேர்டுகளையும் அப்படியே காப்பி செய்து ஹார்ட் டிஸ்க்கில் பதிவு செய்துவிடும். நீங்கள் பயன்படுத்தி முடித்துவிட்டு சென்றவுடன் அந்த கம்ப்யூட்டருக்கு உரியவர் உங்களுடைய அனைத்து ரகசிய விபரங்களையும் முறைகேடாக பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது.
வங்கி பாஸ்வேர்டு போன்ற பாதுகாப்பான பாஸ்வேர்டுகளையும் இந்த முறையில் பதிவு செய்யப்பட்டுவிடும். எனவே இதுமாதிரியான கம்ப்யூட்டரை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
Leave a Reply
You must be logged in to post a comment.