பில்லா 2 படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடித்த பார்வதி ஓமனக்குட்டன், அந்த படம் தோல்வி அடைந்ததால் கோலிவுட்டில் சான்ஸ் கிடைக்காமல் இருந்தார். தற்போது அவரை தேடி ஒரு பாலிவுட் படம் வந்துள்ளது.

தமிழில் மிகப்பெரிய ஹிட்டாகிய பீட்சா படம் ஹிந்தியில் தயாராக உள்ளது. இதில் ரம்யா நம்பீசன் நடித்த கேரக்டரில் நடிக்க பார்வதி ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் ஆர்யாவுடன் இணைந்து கெளரவ வேடத்தில் ‘நம்பியார்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

உலகம் முழுவதும் பல பேஷன் ஷோக்களில் கலந்து கொண்டு வரும் பார்வதி ஓமனக்குட்டன் உலக அழகி போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் தமிழின் முன்னணி நாயகர்களுடன் நடிப்பேன் என நம்பிக்கையுடன் கூறி வருகிறார்.

Leave a Reply