மார்ச் 8ல் பார்த்திபன் மகள் திருமணம்! சீதா வருவாரா?

மார்ச் 8ல் பார்த்திபன் மகள் திருமணம்! சீதா வருவாரா?

இயக்குனர் பார்த்திபன் மகள் கீர்த்தனாவின் திருமணம் வரும் மார்ச் மாதம் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. சென்னையில் உள்ள லீலா பேலஸில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ள இந்த திருமணத்திற்கான அழைப்பிதழை இயக்குனர் பார்த்திபன், கமல், ரஜினி உள்பட பிரபலங்களிடம் கொடுத்து வருகிறார்

பார்த்திபன் – சீதா தம்பதியினரின் மகளான கீர்த்தனா, மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார். அதன்பின்னர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக அவர் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் பார்த்திபனிடம் இருந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வரும் நடிகை சீதா, இந்த திருமணத்திற்கு வரவேண்டும் என்று பார்த்திபன் விரும்புவதாகவும், அவருக்கும் திருமண அழைப்பிதழ் கொடுக்க அவர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply