சூப்பர்ஹிட் படங்களின் இரண்டாம் பாகத்தில் பார்த்திபன் – வடிவேலு?

தமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும் பார்த்திபன் ஆகிய இருவரும் இணைந்து கலக்கிய காமெடி காட்சிகளை யாராலும் மறக்க முடியாது. குறிப்பாக பாரதிகண்ணம்மா மற்றும் வெற்றிக்கொடிகட்டு ஆகிய படங்களின் காமெடி காட்சிகள் இன்றளவும் டிரெண்டில் உள்ளன.

ஆனால் இந்த கூட்டணி நீண்ட காலமாக இணையாமல் இருந்ததால் நகைச்சுவை ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்த நிலையில் ஒரு நல்ல செய்தியாக பார்த்திபன் மற்றும் வடிவேலு ஆகிய இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது

இருவரும் சமீபத்தில் சந்தித்து பேசியதாகவும் மீண்டும் இணைந்து ஒரு காமெடி படத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே விரைவில் பார்த்திபன் நடிக்கும் அல்லது நடிக்கும் படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

பார்த்திபன், வடிவேலு மீண்டும் இணையும் படம் ‘பாரதி கண்ணம்மா’ அல்லது ‘வெற்றி கொடிக்கட்டு’ ஆகிய இரண்டு படங்களில் ஒன்றின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது

Leave a Reply