விஜய்யுடன் மோத முடிவு செய்துவிட்ட பார்த்திபன்
இளையதளபதி விஜய் நடித்த ‘பைரவா’ படத்தின் ரிலீஸ் வரும் பொங்கல் தினத்தில் என்று கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்ட நிலையில் இந்த படத்திற்கு போட்டியாக ‘புரூஸ் லீ’, ‘அதே கண்கள்’, ‘குற்றம் 23’, ‘யாக்கை’, ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, ‘புரியாத புதிர்’ ஆகிய படங்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது இந்த படத்துடன் பார்த்திபன் இயக்கிய ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படமும் இணைந்துள்ளது. ‘நாங்களும் பொங்கலுக்கே விஜய்யம் செய்கிறோம்’ என்று இன்றைய விளம்பரத்தில் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
பொங்கலுக்கு கிட்டத்தட்ட எட்டு படங்கள் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட போதிலும் கடைசி நேரத்தில் ஒருசில படங்கள் பின்வாங்கு என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 26-ல் சிங்கம் 3′ வெளியாகவுள்ளதால் பொங்கல் ரேசில் இருந்து வெளியேறும் படங்கள் பிப்ரவரிக்கு தள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.