பாரீஸ் ஓபன் டென்னிஸ் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் முன்னணி வீராங்கனை மரியா ஷரபோவா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

கால் இறுதியில் பெல்ஜியம் வீராங்கனை ஃபிலிப்கென்சுடன் விளையாடி அபார வெற்றி பெற்ற மரியா ஷரபோவா, நேற்றைய அரையிறுதி போட்டியில் தனது சக நாட்டு வீராங்கனையான அனஸ்டாசியாவை எதிர்கொண்டார்.

மிகவும் விறுவிறுப்பாக நடந்த போட்டியில் 4-6 6-3 6-4 என்ற செட் கணக்கில் மரியா ஷரபோவாவை அனஸ்டாசியா தோற்கடித்தார். மரியா வெற்றிக்காக இறுதிவரை கடுமையாக போராடியதாகவும், இன்றைய நாளில் தனது ஆட்டம் பிரமாதமாக இருந்ததாகவும் அனஸ்டாசியா கூறினார்.

இறுதிப்போட்டியில் அனஸ்டாசியா, சாரா எர்ரானி என்ற வீராங்கனையுடன் மோத உள்ளார்.

Leave a Reply