shadow

நாடாளுமன்ற கூட்டத்தொடர் எப்போது? மத்திய அமைச்சர் தகவல்

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க இருக்கும் நிலையில் இந்த ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் என மத்திய அமைச்சர் ஜோஷி தெரிவித்துள்ளார்.

17 அமர்வுகளாக இந்த கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவித்த மத்திய அமைச்சர் ஜோஷி இந்த கூட்டம் சுமூகமாக நடைபெற அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன கூறப்படுகிறது.