காங்கிரஸ் கட்சியின் ஆட்சி 2014 ஆம் ஆண்டு மே மாதத்துடன் முடிவடையும் நிலையில், பாராளுமன்றத்திற்க்கான தேர்தலுக்காக நாட்டின் அனைத்துக் கட்சிகளும் கூட்டணி குறித்து ஆலோசனை செய்து வருகின்றன. பாஜக நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளது. இதே போல காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் என்று பலர் கருதுகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தின் பெரும் கட்சிகளில் ஒன்றான திமுக, யாருடன் கூட்டணி அமைக்கும் என்று பல்வேறு கருத்துக்கள் வெளிவந்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடிய திமுக பொதுக் குழுக் கூட்டத்திலும் கூட்டணி குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது.

இன்று திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திமுக வரும் பாராளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்தார்.

Leave a Reply