shadow

3 நிமிடமே அவகாசம்: சென்னை விமான நிலையம் அதிரடி அறிவிப்பு

சென்னை விமான நிலையத்திற்குள் பயணிகளை இறக்கிவிட வரும் கார் உள்பட அனைத்து வாகனங்களும் பயணிகளை இறக்கிவிட நுழைந்து வெளியேறுவதற்கு இதுவரை 12 நிமிட அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது வெறும் 3 நிமிடங்களாக குறைக்கப்பட உள்ளது. 3 நிமிடங்களுக்குள் பயணிகளை இறக்கிவிட்டு வெளியேறவில்லை என்றால் அந்த வாகனத்திற்கு அபராதம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அபராதக் கட்டணம் எவ்வளவு என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்த சென்னை விமான நிலைய இயக்குநர் சந்திரமெளலி அதே நேரத்தில் சக்கர நாற்காலி பயன்படுத்தும் பயணிகள், மாற்றுத் திறனாளி பயணிகள் வரும் வாகனங்களுக்கு விதிவிலக்கு உண்டு என்று தெரிவித்தார்.

மேலும் பயணிகளை ஏற்றிச் செல்ல வரும் வாடகைக் கார்கள் 60 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், காருக்கு 2 மணி நேரங்களுக்கு 150 ரூபாய் அதன் பிறகு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 20 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. புதிய விதிகள் அமலுக்கு வந்த பின் கார்களுக்கு 30 நிமிட பார்க்கிங் கட்டணமாக, 40 ரூபாயும், 30 முதல் 120 நிமிடங்களுக்கு 100 ரூபாயும் வசூலிக்கப்படும். இருசக்கர வாகனங்களுக்கு 30 நிமிடங்கள் வரை 20 ரூபாயும் 30 முதல் 120 நிமிடங்களுக்கு 25 ரூபாயும் வசூலிக்கப்படும்.

Leave a Reply