பிரான்ஸ் நாட்டின் மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த ஒர் ரயில் மீது மிகப்பெரிய பாறை ஒன்று உருண்டு வந்து மோதியதில் சில ரயில்பெட்டிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர், மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

பிரான்ஸில் செயின்ட் பெனோயிட் மற்றும் அனோட் என்ற பகுதிகளுக்கிடையே ஓடிக்கொண்டிருந்த ஒரு ரயில்மீது, நிலச்சரிவு காரணமாக ஒரு பெரிய பாறை ஒன்று மிகவேகமாக வந்து மோதியது. இதனால் ரயிலின் இரண்டு பெட்டிகள் நிலைகுலைந்து தலைகுப்புற கவிழ்ந்தது. பயணிகள் பயங்கர அலறல் சத்தத்துடன் ரயிலில் இருந்து கீழே இறங்கினர். செய்தி அறிந்ததும் விரைந்து வந்த மீட்புப்படையினர் மற்றும் தீயணைப்புப்படையினர், ரயில் பெட்டிகளில் சிக்கியவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர்.  இந்த விபத்து காரணமாக விசாரணைக்கு பிரான்ஸ் ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.
[embedplusvideo height=”350″ width=”500″ editlink=”//bit.ly/1bIkMuU” standard=”//www.youtube.com/v/6wBIXmOGydo?fs=1″ vars=”ytid=6wBIXmOGydo&width=500&height=350&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep5438″ /]

 

 

Leave a Reply