பெற்றோர் மட்டுமே வாழ்த்து!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் குஜராத் மாநிலத்தில் ஒரு எளிமையான திருமணம், வெகு சிலர் மட்டுமே கலந்து கொண்டு நிகழ்ந்துள்ளது

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஒன்று ஊரடங்கு காரணமாக வீட்டின் மொட்டை மாடியில் வெகு எளிதாக நடந்தது.

மணமகன், மணமகள் இருவரும் மாஸ்க் அணிந்து திருமணம் செய்து கொண்டனர். மணமக்களை இருவீட்டார் பெற்றோர் மட்டும் மாஸ்க் அணிந்து வாழ்த்து தெரிவித்தனர். மொத்தமே பத்துக்கும் குறைவானர்கள் முன்னிலையில் இந்த திருமணம் எளிமையாக முடிந்தது. இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

Leave a Reply