நாட்டுப்புற படாகி பரவை முனியம்மா காலமானார்
நாட்டுப்புற படாகி பரவை முனியம்மா உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 83
கடந்த சில மாதங்களாகவே சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆனார். இந்த நிலையில் இன்று அதிகாலையில் இயற்கை எய்தினார்
விக்ரம் நடித்த தூள் உள்பட பல திரைப்படங்களில் நடித்த பரவை முனியம்மா, கிராமத்து பாடல்கள் மூலம் உலகப்புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பரவை முனியம்மாவின் மறைவால் தமிழ் திரையுலகம் அதிர்ச்சி அடைந்ததோடு, அவருக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.