shadow

எஸ்.ஏ.சிக்கு முத்தம் கொடுத்தவர் விஜய் பட நாயகியா?

papri ghoshஇளையதளபதி விஜய் நடித்து வரும் ‘விஜய் 60’ படத்தின் இரண்டுகட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து மூன்றாவது கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னை அருகேயுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே கீர்த்திசுரேஷ், அபர்ணா வினோத் ஆகியோர் நாயகிகளாக நடித்து வரும் நிலையில் மூன்றாவது நாயகியாக பாப்ரிகோஷ் என்ற நடிகை இணைந்துள்ளார்.

இவர் ஏற்கனவே தமிழில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்த ‘டூரிங் டாக்கீஸ்’ படத்தில் அவருக்கு முத்தம் கொடுத்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய்யுடன் ஒரு பாடலில் நடனமாடவுள்ள பாப்ரிகோஷ், ஒருசில முக்கிய காட்சிகளில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சுதன்ஷி பாண்டே, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்த படத்தை விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது என்ப்

Leave a Reply