விஜயகாந்த் கட்சியின் அவைத்தலைவராகவும்,  எம்.எல்.ஏவாகவு  இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் பதவி விலகிய முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

சமீபத்தில் அண்ணா விருதை ஜெயலலிதாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட பண்ருட்டி ராமச்சந்திரன், அதிமுகவிற்காக வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்வதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை சென்னையில் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்து அவரிடம் இருந்து அதிமுக உறுப்பினர் அட்டையையும் பெற்றுக்கொண்டார்.

தேமுதிக தற்போது விஜயகாந்த் கட்டுப்பாட்டில் இல்லை என்றும், இனிமேல் அந்த கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்றும் கூறிய பண்ருட்டி ராமச்சந்திரன், வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகளையும் அதிமுக வெற்றிக்கு பிரச்சாரம் செய்வேன் என்றார்.

Leave a Reply