தே.மு.தி.க.வின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று தனது எம்.எல்.ஏ பதவி உட்பட கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக அவர் சபாநாயகர் தனபாலுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

கடிதத்தில், உடல்நலக் குறைவு மற்றும் வயது வயது மூப்பு காரணமாக சட்டமன்ற உறுப்பினர் பதவி மட்டுமின்றி தே.மு.தி.க. அவைத்தலைவர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்ததலைவர் பொறுப்பில் இருந்தும் இன்று முதல் விலகுவதாக அறிவித்துள்ளார். அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் கட்சியின் தலைவர் விஜயகாந்துக்கும், பண்ருட்டி ராமச்சந்திரன் தனது பதவி விலகல் குறித்து கடிதம் எழுதியுள்ளார். அதில், “எனது உடல்நிலை சரியில்லை, மருத்துவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். எனவே, இன்று முதல் அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்திருக்கிறேன். அத்துடன் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்.

மேலும் கடந்த 8 ஆண்டுளுக்கும் மேலாக தங்களுடன் இணைந்து பணியாற்றியபோது தாங்கள் காட்டிய அன்பு மற்றும் என் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சேரும்போது மகிழ்ச்சியும், பிரியும் போது வருத்தமும் ஏற்படுவது இயற்கை. எனக்கு வாக்களித்து என்னை தேர்வு செய்த ஆலந்தூர் மக்களுக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply