தேவையானவை:

பன்னீர் 200 கிராம், பழமிளகாய் (பச்சை மிளகாயை, பழமாகவே கடைகளில் விற்கிறார்கள்) – 50 கிராம், தனியாத்தூள் 2 டீஸ்பூன், தேங்காய்ப் பால் அரை கப்,  சோம்பு – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு, இஞ்சி – பூண்டு விழுது – அரை டீஸ்பூன், நறுக்கிய சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் – அரை குழிக்கரண்டி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

பன்னீரை வாங்கி வந்தவுடன் உங்களுக்குப் பிடித்த வடிவத்தில் நறுக்கி, சுடுநீரில் ஐந்து நிமிடம் போட்டு, தனியாக ஒரு தட்டில் எடுத்து வையுங்கள். கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் பிரவுன் நிறத்துக்கு வந்ததும், நீளமாக நறுக்கிய பழமிளகாய்களைப் போட்டு வதக்கவும். அடுத்ததாக‌ இஞ்சி – பூண்டு விழுது, தனியாத்தூள் என ஒவ்வொன் றாக போட்டு வதக்கி, அடுப்பை ‘சிம்’மில் வைத்து விடுங்கள். இனி, பனீரை போட்டு வதக்கி, தேங்காய்ப் பால் ஊற்றி, உப்பு சேர்த்துவேகவிடுங்கள். இந்த கிரேவி, திக்காக தொக்கு பதத்துக்கு வந்தவுடன் இறக்கிவிடுங்கள். இதை சப் பாத்தி, தோசை என எல்லாவற்றுக்கும் சைட் டிஷ்ஷாக தொட்டுச் சாப்பிடலாம்.

Leave a Reply