shadow

இஸ்ரேல் பேரணியில் ராணுவம் தாக்குதல்: 16 பேர் பலி

இஸ்ரேல் நாட்டில் உள்ள காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு என்ற சார்பில் நடத்திய போராட்டதை ஒடுக்க இஸ்ரேல் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் பாலஸ்தீனம் நாட்டை சேர்ந்த 16 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

பாலஸ்தீன – இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் செய்து வருகிறது. நேற்று 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திரண்டு இஸ்ரேல் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி பேரணியில் கலந்து கொண்டனர். ஆனால் அவர்களை இஸ்ரேல் படையினர் தடுக்க முயற்சித்தனர்.

போராட்டக்காரர்களை தடுக்கும் முயற்சி தோல்வியடைந்ததால் இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதைத்தொடர்ந்து பாலஸ்தீனர்கள் வசிப்பிடங்களை நோக்கி குண்டுவீசுயும் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இந்த தாக்குதல் சம்பவங்களில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

palestinians dead as thousands of gazans march in isreal

Leave a Reply