மிக மெல்லிய சருமத்தினால் ஆனவை நம்முடைய உதடுகள். நம் உடலில் இருக்கும் மற்ற பாகங்களை போல் இவற்றிற்கெனத் தனிப்பட்ட வியர்வைச் சுரப்பியோ எண்ணெய்ச் சுரப்பியோ இல்லை. உதடுகளுக்குப் போதிய பராமரிப்பு இல்லாதபோது அவை உலர்ந்து, கருத்து, பிளவுபட்டு அழகு குறைவதோடு மட்டுமில்லாமல் உடல்நிலையும் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது! இவ்வாறு ஏற்படுவதற்கான காரணங்களை ஆராய்ந்து, அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகளைத் தெரிந்து கொள்ளலாமே!

உதடுகள் உலர்வதற்கான காரணங்கள்

* உடலில் தண்ணீர் அளவு குறைந்திடும்போது.
* வைட்டமின் ஏ, பி, சி குறைபாடு இருந்தால்.
* அதிக அளவில் காபி அருந்துவதால்.
* அதிக அளவில் சூரிய வெப்பம், தூசு மற்றும் மாசுப் பொருட்களினால் பாதிப்படையும்போது.
* அடிக்கடி உதடுகளை ஈரமாக்குவதால்.

உதடுகள் கருப்பதற்கான காரணங்கள்

* அதிக அளவில் காபி அருந்துவதால்.
* மலிவு விலை உதட்டுப் பூச்சுக்களைப் பயன்படுத்துவதால்.
* உதட்டுப் பூச்சு மற்றும் உதட்டுப் பூச்சு லைனர்களை அதிக அளவில் அடிக்கடிப் பயன்படுத்துவதால்.
* அடிக்கடி உதடுகள் காய்ந்துபோவதால்.
* புகைப்பிடிப்பதால்.

இதழ்களின் கருமையை நீக்கும் வழிகள்

* தினமும் சிறிதளவு நெய்யினால் மெதுவாக மசாஜ் செய்திடுங்கள்.
* ஒரு நாளில் 8 டம்ளர் நீர் அருந்திடுங்கள்.
* சத்தான உணவினை உட்கொள்ளுங்கள்.
* தரமான உதட்டுப்பூச்சைப் பயன்படுத்துங்கள்.
* அதிக அளவில் காபி அருந்துவதைத் தவிர்த்திடுங்கள்.
* எலுமிச்சைச் சாற்றை அடிக்கடி உதடுகளில் தடவுங்கள்.

பளபள உதடுகளுக்கான சில எளிய குறிப்புக்கள்

* ஒரு நாளில் 8 டம்ளர் தண்ணீர் குடித்திடுங்கள்.
* காலை மற்றும் இரவு பல் தேய்த்த பிறகு, பிரஷ்ஷின் பின்புறத்தினால் உதடுகளை மெதுவாக மசாஜ் செய்திடுங்கள்.
* ஏ, பி, சி வைட்டமின்கள் நிறைந்த பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
* சருமத்திற்கு ஒவ்வாத அழகுப் பொருட்கள் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள்.
* வெளியே செல்லும்போதும், இரவு படுப்பதற்கு முன்பும் உதடுகளில் தரமான உதட்டுக் களிம்புகளைத் (Lip balm) தடவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *