மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மதுரை, பாலமேட்டில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 543 காளைகள் பங்கேற்றன. இவற்றில் 13 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு 530 காளைகள் களமிறக்கப்பட்டன.

கோர்ட் உத்தரவுபடி காலை 8 மணிக்கு துவங்கி பகல் 2 மணி வரை போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 42 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் 7 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டை காண வெளிநாடு,மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மக்கள் அதிகளவில் வந்திருந்தனர்.

Leave a Reply