shadow

indian_hindu_god_lord_karpaga_vinayagar_pillaiyarpatti_pillaiyar_ganapathy_kannan_krishnan_sivan_esvarar_image_high_resolution_desktop_wallpaperசிறு குழந்தைகளின் விளையாட்டைக் கண்டு ரசிக்கிறோம்; பாலகிருஷ்ணனின் குறும்பைக் கண்டு மகிழ்கிறோம்; பாலகன் முருகனின் கோபத்தைக் கண்டு வியக்கிறோம்; அதேபோல விநாயகக் குழந்தையின் பால லீலைகளைக் கண்டு ஆனந்திக்கிறோம். விநாயகரின் அந்த லீலைகளில் ஒன்றை வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்திலுள்ள கல்யாண மண்டபத்தில் சிற்ப வடிவாக இன்றும் கண்டு மகிழலாம். முதல் சிற்பத்தில் மோதகத்தை (அவருக்குப் பிடித்த கொழுக்கட்டை) தன் தும்பிக்கை நுனியால் மெல்ல எடுத்துக்கொள்கிறார். அடுத்த சிற்பத்தில் அந்த மோதகத்தை தன் கையில் பிடித்துக்கொண்டு, வாய்க்குள் போடத் தயாராகிறார்.  இந்த இரு சிற்பங்களிலும் பால விநாயகரின் கண்களில் மிளிரும் குறும்பு, யாரேனும் தான் மோதகத்தை எடுப்பதைப் பார்த்துவிடுவார்களோ என்ற மெலிதான அச்சம், யாரும் வருமுன் உடனே மோதகத்தை வாயில் போட்டுக் கொண்டு விட வேண்டும் என்ற துடிப்பு என்று குழந்தை உணர்வுகளைக் கண்டு மகிழலாம்.

Leave a Reply