இலங்கையின் சொதப்பலான ஆட்டத்தால் அரையிறுதிக்கு நுழைந்த பாகிஸ்தான்

இலங்கையின் சொதப்பலான ஆட்டத்தால் அரையிறுதிக்கு நுழைந்த பாகிஸ்தான்

ஐசிசி கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றைய முக்கிய ஆட்டத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, இங்கிலாந்து அணியுடன் அரையிறுதியில் மோதும் என்ற நிலை இருந்தது.

இந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்தியாவுக்கு எதிராக அசால்ட்டாக 319 ரன்களை சேஸ் செய்த இலங்கை நேற்றைய சொதப்பலான பேட்டிங் காரணமாக 49.2 ஓவர்களில் 236 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க ஆட்டக்காரர் டிக்வெல்லா மட்டும் 73 ரன்கள் அடித்தார்.

237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் மோசமான தொடக்கத்தை கொடுத்தது. 162 ரன்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து கிட்டத்தட்ட தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் சர்ஃப்ரஸ் அஹமது மற்றும் முகம்மது அமீர் ஆகியோர் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். பாகிஸ்தான் அணி 44.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 237 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக சர்பரஸ் அகமது தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply