சொந்த மண்ணில் இங்கிலாந்தை பந்தாடிய பாகிஸ்தான். இறுதிப்போட்டிக்கு தகுதி

சொந்த மண்ணில் இங்கிலாந்தை பந்தாடிய பாகிஸ்தான். இறுதிப்போட்டிக்கு தகுதி

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடந்த முதல் அரையிறுதி போட்டியில் தொடர் வெற்றிகளை பெற்று வந்த இங்கிலாந்து அணியுடன் பாகிஸ்தான் மோதியது. இந்த போட்டியில் சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி பாகிஸ்தானின் அபாரமான பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடிக்க முடியாமல் 49.5 ஓவர்களில் 211 ரன்களுக்கு சுருண்டது. 212 என்ற எளிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் 37.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 215 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 76 ரன்கள் எடுத்த அசார் அலி ஆட்டநாயகனாக தேர்வு பெற்றார்.

இன்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே 2வது அரையிறுதி போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெல்லும் அணி, வரும் ஞாயிறு அன்று பாகிஸ்தானுடன் இறுதிப்போட்டியில் மோதும். மீண்டும் ஒரு இந்தியா-பாகிஸ்தான் போட்டி வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply