பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லைப் போக்குவரத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தடை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த போக்குவரத்தை இருநாடுகளும் கூட்டாக பேசி நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் இஸ்லாமாபாத்தில் நடந்த ஒரு தீவிரவாதத் தாக்குதலில் 70 பேர் பரிதாபமாக உயிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள்தான் காரணம் என்று பாகிஸ்தான் முடிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து அதிரடியாக நிறுத்தப்பட்டு பாதைகள் அடைக்கபப்ட்டன.

தற்போது இந்த பகுதியில் அமைதி திரும்பியுள்ள நிலையில் இருநாட்டு தூதரக அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் மீண்டும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான முறைப்படியான உத்தரவை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பிறப்பித்துள்ளார்.

Leave a Reply