shadow

ஜாதவின் மனைவி, தாயார் விதவைகள் போல நடத்தப்பட்டதாக சுஷ்மா சுவராஜ் குற்றச்சாட்டு

குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் சிறையில் காண சென்ற அவரது மனைவி மற்றும் தாயார் ஆகிய இருவரையும் பாகிஸ்தான் அதிகாரிகள் விதவைகள் போல நடத்தியுள்ளதாக சுஷ்மா சுவராஜ் பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து இன்று பாராளுமன்றத்தில் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் அறிக்கை ஒன்றை படித்தார். அதில் அவர் கூறியதாவது:

அப்போது ஜாதவ் குடும்பத்தினர் மீது பாகிஸ்தான் மனித உரிமை மீறலில் ஈடுபட்டு தாலி, பொட்டு, வளையல் ஆகியவற்றை அகற்றியதற்கு கண்டனம் தெரிவித்தார். அதிகாரிகள் அவர்களை விதவைகள் போல நடத்தியுள்ளனர் என்று குறிப்பிட்டார்.

ஜாதவின் தாயார் சேலை அணிந்து சென்றதற்கு பதிலாக சல்வார் அணிந்து செல்ல வற்புறுத்தப்பட்டார். மராத்தி மொழியில் பேச அனுமதி மறுத்ததுடன் ஜாதவின் மனைவி ஷூவில் மென்பொருள் ரகசியமாக பொருத்தப்பட்டு இருப்பதாக கூறி சோதனை நடத்தியதையும் கண்டித்தார்.

ஜாதவ் குடும்பத்தினருக்கு சர்வதேச நீதிமன்றம் மூலம் நிரந்தர தீர்வு கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் சுஷ்மா சுவராஜ் உறுதி அளித்தார்.

இதேபோல் டெல்லி மேல்-சபையிலும் சுஷ்மா சுவராஜ் அறிக்கை தாக்கல் செய்தார். முன்னதாக ஜாதவ் விடுதலைக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சர்வதேச அமைப்புகள் இதை கண்டிக்க வேண்டும் என்று மேல் சபை தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.

காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் பேசுகையில், பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தார். நமது சகோதரிகளை அந்நிய நாடு இழிவுபடுத்தியிருப்பதை ஏற்க முடியாது

Leave a Reply