shadow

நீதிமன்றத்தில் ஆஜராகாத முஷரப் சொத்துக்களை பறிமுதல் செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு

Pervez Musharrafபாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் மீது பதிவு செய்யப்பட்டிருந்த தேசத்துரோக வழக்கு, கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் எந்த வழக்கிற்கு முஷரப் ஆஜராகாததால், பாகிஸ்தானில் அவருக்கு இருக்கும் சொத்தை பறிமுதல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முஷாரப் அதிபராக இருந்தபோது 2007ஆம் ஆண்டு லால் மசூதிக்குள் ராணுவம் புகுந்து தீவிரவாதிகளை வேட்டையாடியது. இந்த மோதலில் மதகுரு அப்துல் ரஷீத் காஜி கொல்லப்பட்டார். இந்த படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைக்கு முஷாரப் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.

இந்நிலையில் இவ்வழக்கு இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது முஷாரப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவில், அரசு நிர்வாகத்திற்கு உதவி செய்வதற்காக ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைக்காக, அவர்கள் மீதோ அதிகாரிகள் மீதோ வழக்கு பதிவு செய்ய முடியாது என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி நிராகரித்தார். அத்துடன், விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால் முஷாரப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.

Leave a Reply