shadow

இலங்கையில் பொருளாதார சீர்குலைவு, அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு போன்றவற்றால் இலங்கை அரசு திவாலாகி இருக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத அளவு விலை உயர்ந்துள்ளது.இதனால் இலங்கை அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.

தற்போது இந்த நிலை இந்தியாவின் மற்றொரு அண்டைநாடான பாகிஸ்தானுக்கும் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.

அங்கு பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பினர்.