தீபாவளிக்கு முந்தைய நாள் பாகிஸ்தான் வெறிக்கு பலியான மன்தீப் சிங். உடலை கண்டதுண்டமாக வெட்டி கொடூரம்

தீபாவளிக்கு முந்தைய நாள் பாகிஸ்தான் வெறிக்கு பலியான மன்தீப் சிங். உடலை கண்டதுண்டமாக வெட்டி கொடூரம்

mandeep-singh_09368இந்திய மக்கள் அனைவரும் தீபாவளி கொண்டாட்டத்திற்கு தயாரான வெள்ளி இரவு திடீரென இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய ராணுவ வீரர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இந்திய வீரர் மன் தீப்சிங் வீரமரணம் அடைந்தார். மரணம் அடைந்த மன்தீப் சிங் உடலை எடுத்து கொண்டு சென்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் கண்டதுண்டமாக வெட்டி தங்களை வெறியை தீர்த்துள்ளனர். இதனால் தீபாவளி கொண்டாடிக்கொண்டிருந்த இந்தியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

30 வயதே ஆன மன்தீப் சிங் மரணம் குறித்து அவரது இளம் மனைவியும் காவல்துறை அதிகாரியுமான பிரிர்னா தனது கணவரின் மறைவு குறித்து கூறியபோது, ‘’’பாகிஸ்தான் தீவிரவாதத்தை வளர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கிறது. தீவிரவாதிகளிடம் இருந்தே தகுந்த பாடத்தை ஒருநாள் பாகிஸ்தான் கற்றுக்கொள்ளும். இந்த ஒரு சம்பவம் மற்ற இந்திய வீர்ர்களுக்கு பாடம் என்று பாகிஸ்தான் எண்ணுகிறது. இதுபோன்ற வலி மற்ற எந்த இந்தியனுக்கும் நேரக்கூடாது. இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்’ என்று கூறினார்.

மன்தீப் சிங் தந்தை கூறியபோது, “‘’பாகிஸ்தானுக்கு தக்கப் பதிலடியை இந்திய ராணுவம் கொடுக்க வேண்டும். இந்திய மக்களின் பாதுகாப்புக்காக என் மகன் உயிர் தியாகம் செய்துள்ளார். அவனுடைய இந்தத் தியாகத்தை ஏற்றுக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

மன்தீப் சிங் சகோதரர் சந்தீப் சிங் இதுகுறித்து கூறியதாவது, ‘என் சகோதரர் வீர மரணம் அடைந்துள்ளார். வீரத்துக்குரிய அவனுடைய தியாகத்தை பாகிஸ்தான் சிதைத்துள்ளது’’ என்று கூறியுள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்துள்ளார் மன்தீப் சிங். மறுபடியும் தீபாவளிக்கு வருவதாக சொல்லிச் சென்ற அவர், எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்த நிலையில் தனது விடுமுறையை ரத்து செய்துவிட்டு கடமையில் கருத்தாக இருந்துள்ளார். ஒரு மாவீரனின் உடலை சிதைத்த தீவிரவாதிகளின் உடல்களும் சிதைக்கப்பட வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்தியனின் கோபக் குரலாக ஒலிக்கிறது’

Leave a Reply

Your email address will not be published.