ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றிப்படம் படையப்பா. இந்த படத்தில் ரஜினியோடு சிவாஜிகணேசன், ரம்யாகிருஷ்ணன், செளந்தர்யா, ஆகியொர் நடித்திருப்பர்கள். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

படையப்பா முதல் பாகத்தில் ரஜினியை அடைய முடியாமல் க்ளைமாக்ஸில் ரம்யா கிருஷ்ணன் இறந்துவிடுவார். படையப்பா இரண்டாம் பாகத்தில் ரம்யா கிருஷ்ணன் மறுபடியும் பிறந்து ரஜினியை அடைய முயற்சிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது என கே.எஸ்.ரவிகுமார் கூறியுள்ளார். மேலும் இந்த கேரக்டரில் ரம்யா கிருஷ்ணனே மீண்டும் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பாகத்தில் நடித்த செளந்தர்யா எதிர்பாராத வகையில் விபத்தில் மரணம் அடைந்துவிட்டதால் அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகை நடிக்கும்படியாக திரைக்கதை மாற்றியமைக்கபப்ட்டுள்ளது. மற்றப்டி முதல் பாகத்தில் நடித்த பல நடிகர், நடிகைகள் இதிலும் நடிக்க உள்ளனர்.

விரைவில் இந்த படத்திற்கான முறையான அறிவிப்பு வெளிவரும் என தெரிகிறது.

Leave a Reply