shadow

முஸ்லீம்களுக்கு விற்பனை செய்ய மாட்டேன். அமெரிக்க வியாபாரியின் நூதன விளம்பரம்

clintonஅமெரிக்காவில் ஏராளமான முஸ்லீம்களை அனுமதித்ததால் நாட்டில் தீவிரவாதம் அதிகரித்துள்ளதாகவும், நான் அதிபர் ஆனதை அமெரிக்காவில் முஸ்லீம்கள் நுழைய அனுமதிக்க மாட்டேன்’ என்று பேசி குடியரசு கட்சியின் வேட்பாளர் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கிட்டத்தட்ட இதே கருத்தை அமெரிக்காவில் உள்ள ஆயுத வியாபாரி ஒருவர் தனது விளம்பரத்தில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள பெனில்வேனியா மாகாணம் ஜாக்சன் சென்டர் என்ற பகுதியில் சிறிய ரக ஆயுதங்களை விற்பனை செய்யும் பால் சாண்ட்லர் என்பவர் அமெரிக்க நாளிதழில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

முஸ்லிம்கள் மற்றும் ஹிலாரி கிளிண்டனின் ஆதரவாளர்களுக்கு எங்கள் கடையில் துப்பாக்கி உள்பட எந்த ஆயுதங்களையும் விற்பனை செய்ய மாட்டோம். தீவிரவாதிகளுக்கு துப்பாக்கி விற்பனை செய்ய விரும்பவில்லை என்று அவர் விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியபோது, ‘ஜனநாயக கட்சியினர் அமெரிக்காவை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அமெரிக்காவில் ஏராளமான முஸ்லிம்களை அனுமதித்து வருகிறார்கள். முஸ்லிம்களுக்கு ஆயுதங்களை அளித்து ஆபத்தை வரவழைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை’ என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply