shadow

ஓவியாவுக்கு டுவிட்டர் மூலம் ஆறுதல் கூறிய பிரபலங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சூப்பர் ஸ்டார் ஓவியா நேற்று வெளியேறிவிட்டதாக வெளிவந்துள்ள தகவல் இந்த நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி திரையுலகினர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதுகுறித்து திரையுலகினர் கூறியதை பார்ப்போம்

ஸ்ரீப்ரியா: ஓவியாவின் வெளியேற்றம் பெரும் மன வருத்தத்தை தருகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த நிலைமையில் ஓவியா வெளியேறுவது அவருக்கு ஒருவிதத்தில் நல்லதுதான். வெளியே அவருக்கு இருக்கும் ஆதரவை அவர் தெரிந்து கொண்டால் அவர் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு பெருமைப்படுவார்.

ஸ்ரீதிவ்யா: ஓவியா தற்கொலைக்கு முயன்றதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி அதிர்ச்சியாக உள்ளது. மன வலிமையுடன் இருங்கள் ஓவியா. நீங்கள் ஏற்கனவே அனைவரின் இதயத்தை வென்றுவிட்டீர்கள்

சதீஷ் (நடிகர், நடன இயக்குனர்): ஓவியா அனைவரிடமும் பேசி கொண்டிருந்தாலும் தனிமையில் இருப்பதை போல் உணர்ந்தார். எனவே அவர் வெளியேறியது அவரை பொருத்தவரையில் நல்ல முடிவுதான்

ரோபோ சங்கர்: பை பை ஓவியா, குட்பை பிக்பாஸ் தமிழ்

ஆர்த்தி: கோடிக்கணக்கான மக்கள் வைத்த அன்பு வீணாகாது. ஓவியா டார்லிங் நான் எப்போதும் உனக்கு ஆதரவாக இருப்பேன். நல்ல உடல்நிலை, அமைதியான நிலையை அடைய வாழ்த்துக்கள்

 

Leave a Reply