shadow

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு உடன் ஓவியா நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த படம் வரும் 24 ஆம் தேதி பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு பூஜை நடக்கும் தினத்தன்று அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய புகழைப் பெற்றவர் ஓவியா என்பதும் தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர் யோகிபாபு என்பதும் தெரிந்ததே

இவர்கள் இருவரும் இணையும் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.