ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் திடீர் மரணம்.

“Capote” என்ற படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதுபெற்ற ஹாலிவுட் நடிகர் ஃபிலிப் சைமோர் நேற்று அமெரிக்காவில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 46

நியூயார்க் நகரில் வாழ்ந்து வரும் ஹாலிவுட் நடிகர் ஃபிலிப் சைமோர் ஹாஃப்மேன், நேற்று காலை கையில் ஊசி குத்தியிருந்த நிலையில் மரணம் அடைந்து இருந்ததாகவும், அவர் அதிக போதை மருந்து மருந்து பழக்கம் உடையவர் என்பதால் அதன் காரணமாக அவர் மரணம் அடைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே அவரது மரணம் குறித்து இறுதி முடிவு எடுக்க முடியும் என நியூயார்க் போலீஸார் தெரிவித்தனர்.

கடந்த 2006ஆம் ஆண்டு “Capote” என்ற படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது பெற்ற ஃபிலிப் சைமோர், 1967ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் தேதி பிறந்தவர். இவருக்கு மிமி ஓ டோன்னல் என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். இவர் இதுவரை சுமார் 50 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.