கூவத்தூர் செல்கிறார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்!

கூவத்தூர் செல்கிறார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்!

கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களிடம் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூவத்தூர் புறப்பட்டு சென்றார். அவருடன் அவருக்கு ஏற்கனவே ஆதரவு கொடுத்த எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்கள் உடன் செல்கின்றனர்.

தமிழக அரசியலில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சுப்ரீ கோர்ட் இன்று காலை தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன்படி அடுத்த 10 ஆண்டுகளுக்கு சசிகலாவால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் தீர்ப்புக்கு பின்னர் அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட சசிகலா அதிமுகவின் மூத்த நிர்வாகி எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்ற குழு தலைவராக நியமனம் செய்தார். இந்நிலையில் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு அதிமுக எம்எல்ஏக்களுடன் கூவத்தூர் தனியார் விடுதிக்கு புறப்பட்டு சென்றார்.

அதிமுகவை ஜெயலலிதா வழியில் தொடர்ந்து நடத்த எம்எல்ஏக்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று பன்னீர் செல்வம் கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏக்களிடம் கேட்டுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.