தினகரன் ஆதரவாளர்கள் தங்கியிருந்த சொகுசு விடுதியை முற்றுகையிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்க: புதுவையில் பரபரப்பு

தினகரன் ஆதரவாளர்கள் தங்கியிருந்த சொகுசு விடுதியை முற்றுகையிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்க: புதுவையில் பரபரப்பு

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் புதுவையில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்துள்ள நிலையில் அந்த விடுதியை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சுற்றி வளைத்து முற்றுகையிட முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் ஓபிஎ-ஈபிஎஸ் இணைப்பு நடந்து முடிந்தது. இந்த நினைப்புக்கு பின்னர்தான் தினகரன் ஆதரவாளர்கள் தங்கியிருந்த விடுதியை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் கருணாஸ் உள்பட அதிமுகவின் மூன்று கூட்டணி கட்சியின் எம்.எல்.ஏக்களும் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலையில் தினகரனுக்கு 40 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும் இன்று இரவுக்குள் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply