அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறாரா ஓபிஎஸ்? பரபரப்பு தகவல்

அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறாரா ஓபிஎஸ்? பரபரப்பு தகவல்

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் செல்ல இருப்பதாகவும் தனக்கு பாதுகாப்பு கேட்டு அவர் காவல்துறையிடம் மனு கொடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என சமீபத்தில் நீதிமன்ற தீர்ப்பு வெளியானதை அடுத்து இன்று எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அலுவலகம் சென்றார்.

இந்த நிலையில் அதிமுக அலுவலகத்திற்கு ஓபிஎஸ் விரைவில் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அவரது ஆதரவாளர் பிரபாகர், ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனு அளித்துள்ளார்.