சேர்ந்தா சேருங்க…சேரலைன்னா போங்க: விரக்தியில் ஓபிஎஸ்

சேர்ந்தா சேருங்க…சேரலைன்னா போங்க: விரக்தியில் ஓபிஎஸ்

அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பகட்டத்திலேயே முட்டுக்கட்டையாக உள்ளது. இரு அணிகள் தரப்பிலும் குழுக்கள் அமைத்த போதிலும், பேச்சுவார்த்தை அதிகாரபூர்வமாக இன்னும் தொடங்கவில்லை. இரு அணிகளை சேர்ந்த சிலர் பேச்சுவார்த்தை நடைபெறாமல் இருக்க சதி செய்வதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இரு அணிகளும் சேரவில்லை என்றால் பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்ட இர்ண்டு குழுக்களையும் கலைத்துவிடுங்கள். அதனால் எங்களுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆவேசமாக கூறியுள்ளார்.

நேற்று திண்டுக்கல் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய ஓபிஎஸ், ‘சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து விலக்கி வைக்கச் சொல்லியும் இதுவரை முதல்வர் பழனிச்சாமி அதனை செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.

மேலும், இரண்டு அணிகளும் இணையவில்லை என்றால் பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்ட குழுக்களை கலைத்துவிடுங்கள் என்றும் அப்படி செய்வதால் தங்களுக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.

அதிமுக தொண்டர்கள் அனைவரும் தங்கள் பக்கம் இருப்பதாகவும், அதிமுகவை கட்டிக்காப்பதற்கு எவ்வளவு பெரிய தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மேலும் ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க வேண்டும் என்றும் அதற்காக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறிய ஓபிஎஸ், இதனை செய்ய ஈபிஎஸ் மறுத்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.