shadow

நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர ஓபிஎஸ் முடிவு

மு.க.ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இதுகுறித்து மனுத் தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்லான அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை தீர்மானத்தின் போது, ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுத்து திமுக எம்எல்ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட அமளியின் காரணமாக அவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட்டனர். பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில் அரசுக்க்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏக்களும், எதிராக 11 எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர்

இதன்படி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், தமிழக பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மனுத்தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளனர். அனேகமாக பன்னீர்செல்வம் தரப்பு வழக்க்கறிஞர்கள் இன்று மாலை உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply