shadow

டெல்லி பயணம் ஏன்? ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லி சென்று நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்துள்ள நிலையில் டெல்லி பயணம் எதற்காக என்பது குறித்து ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் விளக்கியுள்ளார்.

இந்த டெல்லி பயணம் ஒரு அரசியல் பயணம் இல்லை என்றும், தனது சகோதரர் சிகிச்சைக்கு ராணுவ விமானம் வழங்கியதற்கு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி தெரிவித்ததாகவும் ஓபிஎஸ் கூறினார்.

மேலும் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான காலநிலை இன்னும் உருவாகவில்லை என்றும், தக்க சமயத்தில் கூட்டணி உள்பட அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். நாடாளுமன்ற பணிகளை அதிமுக தொடங்கிவிட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சற்றுமுன் கூறிய நிலையில் துணை முதல்வர் இவ்வாறு கூறியிருப்பது முரண்பாடாக இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply