சட்டப்பேரவையில் ஓபிஎஸ்-ஐ புகழ்ந்த எம்.எல்.ஏக்கள்: கடுப்பில் ஈபிஎஸ் ஆதரவாளர்கள்

சட்டப்பேரவையில் ஓபிஎஸ்-ஐ புகழ்ந்த எம்.எல்.ஏக்கள்: கடுப்பில் ஈபிஎஸ் ஆதரவாளர்கள்

அதிமுகவின் இரு பிரிவுகளாக இணைந்து கொண்டிருந்த ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஒரே அணியில் இணைந்தாலும் இன்னும் மனதளவில் இரு அணிகளாகத்தான் இருப்பதாகவும், எந்த நேரத்திலும் மீண்டும் இரு அணியாக உடைய வாய்ப்பு இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் கூறி வருகின்றன.

இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை கூடியதும் கேள்வி நேரத்தில் பேசிய, கலசப்பாக்கம் எம்.எல்.ஏ, ‘ஜல்லிக்கட்டு நாயகன் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் என பாராட்டி பேசினார். அதற்கு பதிலளித்த ஓபிஎஸ் அனைத்து பாராட்டுக்களுக்கும் உரியவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மட்டுமே என்று கூறினார்.

சட்டப்பேரவையில் முதல்வரை முதலில் பாராட்டாமல், துணை முதல்வரை பாராட்டியதால் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் முணுமுணுத்தனர். இதனை உடனே புரிந்து கொண்ட ஓபிஎஸ் பின்னர் எழுந்து, ‘சட்டப்பேரவையில் என்னை புகழ்ந்தும், பாராட்டியும் பேச வேண்டாம் என்று அதிமுக எம்எல்ஏக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Reply