வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே மளிகை கடை: அதிரடி அறிவிப்பு

அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது

இருப்பினும் அந்த கடைகளுக்கும் படிப்படியாக நேரம் குறைப்பு ஏற்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் முழு நேரமும் செயல்பட அனுமதித்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலை 6 மணி முதல் 2 மணி வரை மட்டுமே காய்கறிகள் மற்றும் மளிகை கடைகள் அனுமதிக்கப்பட்டது. அதன் பின்னர் திடீரென ஒரு மணி ஆக குறைக்கப்பட்டது

இந்த நிலையில் தற்போது வேலூர் மாவட்டத்தில் இனி வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே மளிகை கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் மட்டும் ஞாயிறு திங்கள் மற்றும் வியாழன் ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே மளிகை கடைகள் செயல்படும் என்றும் காய்கறி கடைகள், பெட்ரோல் நிலையங்கள் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது

பால் விற்பனை நிலையங்கள் தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை மட்டுமே இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஊரடங்கு உத்தரவு முடியும்வரை இறைச்சி கடைகள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply