shadow

கருணாநிதி இடத்தை யாரால் நிரப்ப முடியும்: துரைமுருகன் பேட்டி

திமுக தலைவர் கருணாநிதியின் இடத்தை மு.க.ஸ்டாலினால் மட்டுமே நிரப்ப முடியும் என்று ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த திமுக பிரமுகர் துரைமுருகன் கூறியுள்ளார்.

வெற்றிடத்தைக் காற்று நிரப்பும்’ என்பது விஞ்ஞானம். எனவே, இயற்கையிலேயே வெற்றிடம் என்ற ஒன்று இருக்கவே முடியாது. ‘காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைப் போல ஒட்டுமொத்த மக்கள் சமுதாயத்தின் மதிப்பைப் பெற்றிருக்கக்கூடிய தலைவராக இப்போது யாரும் இல்லை’ – என்ற நினைப்பில் இப்படிச் சிலர் சொல்கிறார்கள்.

‘சுதந்திரா கட்சி’யின் தலைவர் ராஜாஜி திறமைசாலி. ஆனாலும் ஒரு தேர்தலில் அந்தக் கட்சி தோற்றபிறகு அந்தக் கட்சியும் அழிந்துவிட்டது; அவரும் காணாமல் போய்விட்டார். அதன்பிறகு வந்த கா.கா.தே.கா., மா.கா.மூ.கா-ன்னு எத்தனையோ கட்சிகளும் வந்த இடம் தெரியாமலே போய்விட்டன. ஆனால், தி.மு.க என்பது கட்சியல்ல, இயக்கம்! சமுதாய விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம். அறிஞர் அண்ணா மறைந்தபிறகு, அந்த இடத்தை நிரப்ப கருணாநிதி வந்தார். இப்போது 95 வயதில், செயல்பட முடியாத நிலையில் அவர் இருக்கிறார். அதனாலேயே இயக்கமும் செயல்படாமல் இருந்துவிடாது.

தி.மு.க-வில் கருணாநிதியின் இடத்தில், இன்றைக்கு மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றிருக்கிறார். நாளை ஸ்டாலினுக்குப் பிறகு அந்த இடத்துக்கு இன்னொருத்தர் வருவார்!’’

Leave a Reply