முதல்வரின் அசத்தல் ஐடியா!

கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டை விட்டு வெளியே வரும் அனைத்து மக்களும் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாஸ்க்கின் டிமாண்டை கருத்தில் கொண்டு மெடிக்கல் ஸ்டோர்களில் மாஸ்க்கின் விலையை அவர்கள் இஷ்டத்திற்கு உயர்த்தியுள்ளனர்,. ஒரு மாஸ்க்கின் நிலை 50ரூபாய் 100ரூபாய் என்றெல்லாம் ஒரு சில இடங்களில் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

இந்த நிலையில் ஆந்திர முதல்வரின் முயற்சியால் சுயவேலைவாய்ப்பு செய்யும் பெண்கள் மிகக் குறைந்த விலையில் மாஸ்க்களை தயாரித்து வருகின்றனர் முதல்வரின் ஆதரவு காரணமாக அவர்கள் தயாரிக்கும் மாஸ்க்கின் விலை ரூபாய் 3.50 மட்டுமே என்றும் இதன் மூலம் அந்த பெண்கள் தினசரி ரூபாய் 500 சம்பாதித்து வருகின்றனர் என்றும் தெரிகிறது

இந்த மாஸ்க்குகள் ஆந்திர மாநிலத்திற்கு போக மீதம் மற்ற மாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்படும் என்றும் முடிந்தால் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் ஆந்திர மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன குறைந்த விலையில் தரமான மாஸ்க்குகளை தயாரிக்கும் ஆந்திரப் பெண்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Leave a Reply