எனக்கு ஒரு ரூபாய் சம்பளம் போதும்:

ஜெயலலிதா பாணியில் அறிவித்த நடிகை

இந்த லாக்டவுன் பிரச்சனை முடியும்வரை இன்னும் ஒரு வருடத்திற்குள் தனக்கு ஒரு ரூபாய் சம்பளம் கொடுத்தால் எந்த படத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று நடிகை ஆர்த்தி கூறியுள்ளார்

ஒரு வருடம் முழுவதும் தான் நடிக்கும் படத்தில் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் பெற போகிறேன் என்றும் இது தயாரிப்பாளர்களுக்கு தன்னால் முடிந்த சிறிய உதவி என்றும் கூறியுள்ளார்

மேலும் தங்களது சம்பளத்தை குறைத்த விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், ஹரி ஆகியோர்களுக்கு தனது மனமார்ந்த பாராட்டுக்கள் என்றும் அவர் கூறியுள்ளார். ஆர்த்தியின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சம்பளமாக ஒரு ரூபாய் மட்டுமே பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.