டிக்கெட் முதல் கால்டாக்சி வரை ஒரே அப்ளிகேசன். ரயில்வே துறை அதிரடி திட்டம்

டிக்கெட் முதல் கால்டாக்சி வரை ஒரே அப்ளிகேசன். ரயில்வே துறை அதிரடி திட்டம்

1இந்தியன் ரயில்வே தனது பயணிகளுக்கு அவ்வப்போது சிறப்பு சலுகைகளை வழங்கி வரும் நிலையில் ஒரே அப்ளிகேசனில் பயண டிக்கெட், உணவு, கால் டாக்சி உள்பட அனைத்தையும் பெற்றுக்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

தற்போது இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி அப்ளிகேஷன் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு ,உணவு ஆகியவற்றை மட்டுமே பதிவு செய்ய முடியும். ஆனால் கால் டாக்சி,போர்ட்டர், ஓட்டல் அறைகள் முன்பதிவு செய்தல் போன்றவைகளுக்கு தனித்தனி அப்ளிகேசன் உள்ளது. இனி இதுபோன்ற 17 சேவைகளை ஒரே அப்ளிகேஷன் மூலம் பெறும் வகையில் புதிய குறுஞ்செயலி ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இந்த நவீன குறுஞ்செயலி உருவாக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், சோதனைகளுக்கு பின்னர் இந்த அப்ளிகேஷன் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரே ஒரு அப்ளிகேஷன் மூலம் பல்வேறு சேவைகளின் முன்பதிவுகள் எளிதாக முடிந்துவிடுவதால் இனி இந்திய ரயில்வே பயணிகள் நிம்மதியான ரயில் பயணத்தை அனுபவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.