shadow

8a copyநடந்து முடிந்துள்ள பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஐந்து இடங்களுக்கு மேல் கிடைக்காது என திமுக தலைவரின் மகன் மு.க.அழகிரி நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டின் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது: இந்த பாராளுமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி இருந்ததால் அதிமுகவிற்கே இது பலமாக அமைந்துள்ளது. கூட்டணி இல்லாமலும், கோஷ்டி பூசலில் சிக்கியும் தவித்த நிலையில் தேர்தலை சந்தித்துள்ள திமுக, ஐந்து இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது என்று அவர் கூறியுள்ளார். ஆனால் இந்த கருத்தை திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன் மறுத்துள்ளார். பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் அழகிரியின் பேட்டி உள்ளதாகவும், உண்மையில் திமுக மாபெரும் வெற்றி பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் அதிமுக அணி குறைந்தது 33 தொகுதிகளில் வெற்றி பெறும் என முதல்வர் ஜெயலலிதா நம்பிக்கையுடன் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அவரது கணக்குப் படி ஏழு இடங்கள்தான் மற்ற கட்சிகள் ஜெயிக்குமாம். ‘நாகப்பட்டினம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இரண்டு தொகுதிகள் தி.மு.க-வுக்கும், கன்னியாகுமரி மற்றும் கோவை ஆகிய இரண்டு தொகுதிகள் பி.ஜே.பி-க்கும் கிடைக்கும். விருது​நகரில் வைகோ, தர்மபுரியில் அன்புமணி ஆகிய இருவரும் ஜெயிப்பார்கள். புதுவையை என்.ஆர்.காங்கிரஸ் பிடிக்கும். இந்த ஏழு தொகுதிகள் நீங்கலாக அனைத்திலுமே இரட்டை இலைதான் ஜெயிக்கும்’ என்று சொல்லிவருகிறாராம் முதல்வர்!

Leave a Reply