shadow

டிஜிட்டலில் மட்டுமே கல்லூரி கட்டணம்! மத்திய அரசு உத்தரவு

கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக கட்டணம் பெறப்படுவதாக எழுந்துள்ள புகார்களை அடுத்து இனிமேல்அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பல்கலைகழகங்களில் பயிலும் மாணவர்கள், கல்வி கட்டணம், தேர்வு கட்டணம் உள்பட அனைத்து கட்டணங்களையும் ‘டிஜிட்டல்’ முறையை மட்டுமே பின்பற்றி செலுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை யுஜிசி இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளவற்றை கல்லூரிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், வணிக நிறுவனங்களுக்கான செலவுகள், ஆசிரியர்கள், ஊழியர்களின் சம்பளம் மற்றும் செலவுகள் உள்பட அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் முறையிலேயே மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply