காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் மட்டுமே. திமுக கூட்டணியில் இருந்து விலக திட்டமா?

காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் மட்டுமே. திமுக கூட்டணியில் இருந்து விலக திட்டமா?
evks
திமுக கூட்டணியில் முதல் ஆளாக எந்தவித நிபந்தனையும் இல்லாமல் இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருக்கின்றது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி முதலில் ஐம்பது தொகுதிகள் வரை கேட்டது. ஆனால் 30 தொகுதிகளுக்கு மேல் தரமுடியாது என்று திமுக தரப்பில் கறாராக கூறிய நிலையில், தற்போது 5 சீட்டுக்களை குறைத்து 25 தொகுதிகள் மட்டுமே தரமுடியும் என திமுக கூறுகிறதாம். இதற்கு காரணம் தமாக, திமுக கூட்டணியில் இணையவிருப்பதாகவும், அந்த கட்சிக்கு 25 தொகுதிகள் தரவுள்ளதாகவும் திமுக கூறுகின்றது. இதனால் காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்துள்ளது.

திமுகவிடம் 25 தொகுதிகளை மட்டும் பெற்று தேர்தலில் நிற்பதற்கு பதிலாக தமிழகம் முழுவதும் 100 தொகுதிகளில் கவனம் செலுத்தி தனியாக போட்டியிடலாம் என காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் மட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்து வருவதாகவும், எந்த நேரமும் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் தமாக, அதிமுகவுடனும் பேசி வருவதால் இன்னும் இதுகுறித்து எவ்வித முடிவுகளும் எடுக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்கள் ஆனபின்னரே எந்தெந்த கட்சிகள் எந்தெந்த கூட்டணியில் இணையும் என்பதை தெளிவாக கூறமுடியும்

Leave a Reply

Your email address will not be published.